கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி மேயர் தலைமையில்...... - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 March 2022

கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி மேயர் தலைமையில்......


தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்.

கடலூர், திருப்பாதிரிபுலியூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப. அவர்கள் தொடங்கிவைத்தார். இச்சிறப்பு முகாம் முதற்கட்டமாக 14.03.2022 முதல் 19.03.2022 வரையிலும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 21.03.2022 அன்று நடைபெறவுள்ளது.


இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 6,39,453 குழந்தைகளும் மற்றும் 2,23,699 பெண்கள் பயனடைய உள்ளார்கள். 1 முதல் 2 வயது வரை 1/2 மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை 1 மாத்திரையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.இச்சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயதிலான அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிலான பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) ஒரேநாளில் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று தகவலளித்து குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.


இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுந்தரிராஜா, வருவாய் கோட்டாட்சியர் திரு.அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையர் திரு.விஸ்வநாதன் துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.மீரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பூபதி,மாவட்ட மலேரியா அலுவலர் மரு.கஜபதி மற்றும் ஆசிரியர்கள், மருத்துவர்கள்,  மருத்துவபணியாளர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

*/