கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டான் ஊராட்சியில் 14 /03 /2022 அன்று தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி நடைபெற்றது அப்பணியில் பணி செய்து வந்த ராஜேஸ்வரி கணவர் பெயர் வேல்முருகன் வயது 45 என்பவரை திடீரென்று முள் புதரில் இருந்து அவருடைய காலில் விரியன் பாம்பு கடித்து மயங்கி கீழே விழுந்தார்.
பக்கத்தில் பணி செய்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அறிந்தவுடன் ஜெயங்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் ஊமாராணி விஜயரெங்கன் ஊராட்சி செயலாளர் பழனி இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் இச்சம்பவம் குறித்து மருதூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் ; வீ. சக்திவேல்
No comments:
Post a Comment