இலங்கியனூரில் ரயில்வே கேட் 73ல் போக்குவரத்து வசதியை தொடர கலெக்டரிடம் கோரிக்கை பொதுமக்கள் மனு .
வேப்பூர் மார்-15
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அருகிலுள்ள இலங்கியனூர் கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செளந்தர்ராஜன், துணை தலைவர் தவமணி பிரேம்குமார்,ஒன்றிய கவுன்சிலர் குமாரி கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்
மனுவில்,,
வேப்பூர் அடுத்த இலங்கியனூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, விருத்தாசலம் - சேலம் ரயில்பாதை செல்கிறது அதன் வழியாக கேட் நம்பர் 73 மற்றும் 74 உள்ளது.
இதன் வழியே சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதி பெறுகின்றனர். மேலும், சுற்றுப்புற கிராம விவசாயிகளின் முக்கிய போக்குவரத்து வழியாகவும் உள்ளது.
இலங்கியனூர் - நல்லூர் இடையே ரூ. 13 கோடியில் மேம்பாலம் அமைத்த பின் கனரக வாகனங்கள் அதிகளவில் இப்பதையில் செல்கின்றன. இந்நிலையில், கேட் நம்பர் 73ல் சுரங்க பாதை அமைத்தால் பள்ளி பேருந்து, கரும்பு லாரிகள், நெல் இயந்திரம், விவசாய சரக்கு லாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இதனால், இப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, கேட் நம்பர் 73ல் தடுப்பு சுவர் கட்டுவதை தடுத்து, கேட் கீப்பரை நியமித்து போக்குவரத்து வசதியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் ; k. ஜாபர்
No comments:
Post a Comment