சிதம்பரம் நகராட்சியின் முதல் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் நகரில் ஏழை எளிய மக்கள் வசிக்கக்கூடிய குறிப்பாக குடிசை பகுதிகள் அருகிலுள்ள கழிவறைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் சிதம்பரம் நகரில் அங்காளம்மன் கோவில் தெருவில் இருந்து மின் நகர் வழியாக செல்லக்கூடிய மிகப்பெரிய ராட்சஸ சாக்கடை 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது அதை உடனடியாக தூர்வார வேண்டும் சிதம்பரம் மக்களின் மிக முக்கிய பிரச்சனையான குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும், சிதம்பரத்திற்கு மின்மயான சுடுகாடு வேண்டும், கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள நிறைகுறைகளை தெருவிளக்குகள், சாலை வசதி, குடிநீர் பிரச்சனை போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை முதல் கட்டமாக தீர்க்கும் வகையில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடல் நடந்தது. வார்டு கவுன்சிலர்கள் ஆங்காங்கே உள்ள தங்கள் வார்டு நிறைகுறைகளை முன்வைத்தனர் இதுகுறித்து விரைவில் போர்க்கால அடிப்படையில் இப்பணியை செய்ய உத்தரவிட்ட நகர்மன்றத் தலைவர்.
செய்தியாளர்;P. ஜெகதீசன்
No comments:
Post a Comment