நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்க வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணி பல ஆண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. குண்டும், குழியுமாக கிடக்கும் இந்த சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து நடத்தி முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 10-ந்தேதி(வியாழக்கிழமை) காலை பண்ருட்டி, நெய்வேலிஆர்ச் கேட், வடலூர், சேத்தியாதோப்பு, சோழத்தரம் ஆகிய இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், மருதவாணன், கருப்பையன், ரமேஷ்பாபு, திருவரசு, ராமச்சந்திரன், அசோகன் ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர செயலாளர் பால முருகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment