கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் நெய்வேலி வடக்கு வெள்ளூர் மற்றும் ஜி.கே. காலனி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியல் இனத்தைச் சார்ந்த மக்கள் மூன்று தலைமுறையாக வசித்து வரும் நிலையில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் விரிவாக்கப் பணிகளுக்காக அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் திடீரென்று குடியிருப்பு பகுதிகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் என்.எல்.சி நிர்வாகத்தின் மீது கோபமடைந்து திடீரென்று குடும்பம் குடும்பமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் இப்போராட்டம் தகவலறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதித்தமிழர் பேரவை அனைத்து மக்கள் சேவை இயக்கம் ஆகிய கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் விருதாச்சலம் வருவாய் வட்டாட்சியர் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி மாற்று இடம் மிக விரைவில் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
செய்தியாளர் ; வீ.சக்தீவேல்
No comments:
Post a Comment