கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள மங்களூர் ஒன்றியம், வையங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடிநீருக்கான தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆனது கட்டப்பட்டு சில வருடங்கள் ஆகின்றன, இந்தநிலையில் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. இந்த தொட்டியை உடனடியாக சீர்செய்து தரவேண்டுமென்று இந்திய தலைமுறை கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் கேட்டுக்கொண்டனர் .
இப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர் இந்த தொட்டியின் கால்கள் பாதிப்பு அடைந்து கால்களில் உள்ள இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து இடிந்து உடையும் நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு இதனை விரைந்து சரி செய்து தர வேண்டும் என்ற ஊர் பொதுமக்கள்
ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர் .
செய்தியாளர்; செ.பாலமுருகன்
No comments:
Post a Comment