தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை கோடம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்தினார்.
அப்போது கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த தொழுதூர் ஊராட்சியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊராட்சிமன்றதலைவர் குணசேகரன் மங்களூர் மேற்கு ஒன்றிய பொருளாலர் தொழுதூர் இரா.ரமேஷ் தலைமையில் திட்டக்குடி தொகுதி செயலாளரும் 7 வது வார்டு கவுண்சிலருமான ராஜா.அலெக்சாண்டர் முன்னிலையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் விசிகவில் இணைந்தார் அவருக்கு திருமாவளவன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் தமிழகம் முழுவதும் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; k.ஜாபர்
No comments:
Post a Comment