ஐவதகுடி ஆதிதிராவிட நல பள்ளியில் கட்டடம் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 March 2022

ஐவதகுடி ஆதிதிராவிட நல பள்ளியில் கட்டடம் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு


ஐவதகுடி ஆதிதிராவிட நல பள்ளியில் கட்டடம் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு .

வேப்பூர் மார்-15 

கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அடுத்த ஐவதகுடி கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல துவக்கப் பள்ளி உள்ளது.இப்பள்ளியில் , 1ம்‌ வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 66 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.‌ இந்நிலையில், பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் துவங்கியது.


ஆனால், எவ்வித காரணமின்றி கட்டுமானப் பணி முழுமையடையாமல் பாதியில் நிற்கிறது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பழுதடைந்த கட்டடத்தில் படித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்த அரசு பள்ளி கட்டடத்தை இடிக்க அரசு உத்தரவிட்டது.அதன்படி, மாணவர்கள் படித்து வந்த அரசு பள்ளி கட்டடமும் இடிக்கப்பட்டது.

இதனால், மாணவர்கள் பள்ளியில் படிக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. தற்போது, தற்காலிகமாக மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் 66 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இப்பள்ளிக்கென்று சமையற்கூடம் இல்லாததால் திறந்த வெளியில் மாணவர்களுக்கு உணவு தயார் செய்யும் நிலையும் உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளார்.அவரது முயற்சியில் இரண்டு தற்காலிக ஆசிரியர்களை சம்பளம் கொடுத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். 

அரசு பள்ளி மாணவர்கள் படிக்க கட்டடம் இல்லாமலும், பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமலும் உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.

 வேப்பூர் செய்தியாளர் ஜாபர்.K

No comments:

Post a Comment

*/