அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தண்டகாரன்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் விக்னேஷ் ( வயது 19) என்பது தெரியவந்தது.
கைது;
மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிதம்பரம் அருகே உள்ள விளாகம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்( வயது 55) என்பவர் சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கிருந்த விக்னேஷ், ராஜேந்திரனுக்கு பணம் எடுத்து கொடுப்பது போன்று உதவி செய்து, அவரிடம் வேறு ஒரு ஏ.எடி.எம். கார்டை கொடுத்து நூதன முறையில், ராஜேந்திரன் வங்கி கணக்கில் இருந்து 34 ஆயிரத்து 850 ரூபாயை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் ; பாலாஜி
No comments:
Post a Comment