கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு வடக்கு புறம் பிடாரி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பந்தல் தொழிலாளர்கள், நகரவாசிகள் இணைந்து 108 திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டிற்கான 108 திருக்குட நன்னீராட்டு விழா இன்று காலை நடந்தது.
விழாவையொட்டி காலை மூலவர் சக்தி பீடங்களுக்கு 108 குட நன்னீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சந்தன காப்பு அலங்காரத்துடன், உற்சவர் வீதி உலா நடந்தது. இதில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment