வேப்பூரில் முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை, சிறுவன் உள்பட 6 பேர் கைது.!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 March 2022

வேப்பூரில் முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை, சிறுவன் உள்பட 6 பேர் கைது.!!

 

வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தில், முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை, சிறுவன் உள்பட 6 பேர் கைது.

வேப்பூர் மார்-12 கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் அபிசுந்தர் (வயது 17) என்பவர், கடந்த 9 ம் தேதி காலை 8.30மணிக்கு வெளிவாசல் செல்ல கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, அவரது செல்போனும், செருப்பும் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே கிடந்துள்ளது. அதனை தொடர்ந்து வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து வாலிபர் அபிசுந்தரின் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கபட்டது.

பின்னர் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அபிசுந்தர் கொலை செய்யபட்டுள்ளார் என தெரிய வந்ததுஇந்த நிலையில் 10 ந் தேதி வேப்பூர் பஸ் நிலையம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை 11-30 மணியிலிருந்து மதியம் 1-30 மணி வரை, சுமார் 2 மணி நேரம் அபிசுந்தரின் உறவினர்கள் கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அப்போது ஏஎஸ்பி,அசோக்குமார், விருத்தாசலம் ஆர்டிஒ, ராம்குமார் ஆகியோர் கொலை குற்றவாளிகள் கைது செய்யபடுவார்கள் என உறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக வேப்பூரில் முகாமிட்ட ஏஎஸ்பி, அசோக்குமார் போலீசாரின் விசாரணையை முடுக்கி விட்டதில், 5 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் .அப்போது கொலை நடந்ததை( 17 வயது )சிறுவன் ராமர் ஒப்புக்கொண்டதையடுத்து மார்ச் 9 ந் தேதி போலீசார் சந்தேக வழக்காக பதிவை செய்ததை 11- ந் தேதி கொலை வழக்காக மாற்றி வழக்குபதிவு செய்தனர்.

அதன்படி பூலாம்பாடி கிராமத்தில் அபிசந்தர் குடும்பத்தாருடன் முன் விரோதம் கொண்ட பெரியசாமி மகன் இளையராஜா, தங்கவேல் மகன் அண்ணாதுரை, ஆகியோரின் தூண்டுதல் பேரில், இளையராஜாவின் சின்ன அக்காவின் கணவர் நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் பாண்டியன் (வயது33), சின்ன அக்கா மணிமேகலை பாண்டியன் (வயது 31) பெரிய அக்காவான நிதிநத்தம் முருகராஜ் மனைவி, பெரியம்மாள் (வயது 36),பெரிய அக்கா மகன் ராமர் (வயது17), ஆகிய நான்கு பேரும், அபி சுந்தரை கழுத்தை நெறித்தும் மூக்கு, தாடை, பகுதியில் குத்தியதில் சுய நினைவு இழந்துள்ளார் அதன் பிறகு அபிசுந்தரை, கிணற்றில் தூக்கி போட்டு கொலை செய்ததாகவும் மேற்கண்ட 4 பேர் மீதும் , குற்றவாளிகளுக்கு தூண்டுதலாக இருந்த இளையராஜா அண்ணாதுரை ஆகிய இருவர் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment

*/