கடலுார் மாவட்டத்தில் 1 மாநகாரட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் உள்ள 447 கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்தது. 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், மாவட்டத்தில் கடலுார் மாநகராட்சி உட்பட ஓட்டு மொத்த 21 உள்ளாட்சி அமைப்புகளையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்றியது. கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகளில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் 34 இடங்களை கைப்பற்றியது.
சுயேச்சையாக வெற்றி பெற்ற இருவர் தி.மு.க., வில் இணைந்ததால் அக்கூட்டணி பலம் 36 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் 447 பதவியிடங்களில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 2 ம் தேதி பதவியேற்றனர். மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் இன்று (4ம் தேதி) நடத்தப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் கடலுார் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் உட்பட 42 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, இன்றே பதவியேற்பு செய்தனர். தேர்தல் இன்று நடப்பதையொட்டி நேற்று, மேயர், நகராட்சி, பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
அந்த வகையில், இன்று கடலுார் மாநகராட்சி மேயர் வேட்பாளராக சுந்தரி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார் , துணைத் தலைவர் பதவி வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டு தாமரைச்செல்வன் அறிவிக்கப்பட்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற கடலூர் சுந்தரி ராஜா அவர்களுக்கு எம் ஆர் கே பன்னீர்செல்வம் முன்னிலையில் மேயர் பதவி வழங்கப்பட்டது
No comments:
Post a Comment