| நகராட்சி தலைவர் |
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19/2/2022 நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து (22//2/22)அன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று.
திட்டக்குடி நகராட்சி மொத்தம் 24 வார்டு உள்ளது இதில் திமுக 13 வார்டுகளும், அஇஅதிமுக 5 வார்டுகளும், மற்றவை 6 வார்டுகளும் வெற்றி பெற்றார்கள் . இதையடுத்து வெற்றி பெற்ற 24 வார்டு கவுன்சிலர்களும்(02/03/2022 ) அன்று புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் பதவி அவர்களுக்கு , நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி பிரமாண உறுதி மொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர்
| துணை தலைவர் |
இதனைத் தொடர்ந்து இன்று திட்டக்குடி நகராட்சி மன்ற தேர்தலில் தலைவர் நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் அனைத்து வார்டு உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டக்குடி நகர்மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் அவர்களும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர செயலாளர் திட்டக்குடி நகர்மன்ற துணைத் தலைவராக VPP. பரமகுரு அவர்கள் ஒருமனதாக அனைத்து வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் திட்டக்குடி பகுதியில் வாழும் மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .
செய்தியாளர்: செ. பாலமுருகன்
No comments:
Post a Comment