கால் வலி தாங்க முடியாமல், அரியநாச்சி கிராமத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை, வேப்பூர் போலிசார் விசாரணை
வேப்பூர் மார்-12;-
வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் ராமசாமி (வயது 60),இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியதில் இடது காலில் பலத்த காயமடைந்தார்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் நடப்பதற்கு கம்பி ஊன்று கோல் துணையோடு நடந்து வருகிறார் .
அடிக்கடி கால் வலிக்கிறது என்றும், கால் வலி தாங்க முடியவில்லை என்றும் மனைவி பிள்ளைகளிடம் கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் மார்ச் 12 ந் தேதி அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை, பின்னர் அரியநாச்சி சிறுகரம்பலூர் சாலையில் புளிய மரத்தில் தூக்கி மாட்டி இறந்து தொங்குவதாக தகவல் கிடைத்துள்ளது அதனை தொடர்ந்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் .
செய்தியாளர்;k, ஜாபர்
No comments:
Post a Comment