விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 'போக்சோ' வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி, நேற்று முன்தினம் காலை, பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.இதில், மாணவிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அப்பள்ளி விலங்கியல் ஆசிரியர் சாமிநாதன், 32, ஒரு மாதமாக மாணவியின் மொபைல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்து உள்ளார்.நான்கு நாட்களுக்கு முன், மாணவியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, சாமிநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment