தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை விவசாயிகளின் கோரிக்கைகளான சேமக்கோட்டை.,பைத்தாம்பாடி, பகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டியும், கொய்யாவிற்கு குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் அவற்றை பாதுகாக்க குளிர்சாதன வசதி கொண்ட குடோன்.மேலும் விற்பனை செய்வதற்கான ஒரு மையம் ஆகியவற்றை கேட்டு கையேந்தி கவனயீர்ப்பு போராட்டம் வட்டச் தலைவர் K முருகன் தலைமையில் முன்னிலை S தமிழ்ச்செல்வன் வட்ட பொருளாளர் M பழனிவேல் வட்ட துணைச்செயலாளர் K பாலாஜி வட்ட துணை தலைவர், சிறப்பு பங்கேற்பாளர் ஆக R ராமச்சந்திரன் மாவட்ட செயலாளர். R K சரவணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.R லோகநாதன் மாவட்ட துணை தலைவர், G B தேவநாதன் வட்டச் செயலாளர் (வடக்கு )ஆகியோரும் மற்றும் சேமக்கேட்டை ஊரட்சி மன்ற தலைவர் S மணிவண்ணன், மற்றும் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுப்புடன் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகளும் தோட்டக்கலை துறை மாவட்ட இயக்குனர் நடத்தியபேச்சு வார்த்தையில் சேமக்கோட்டைப் பகுதிக்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொண்டிருப்பதாகவும் மற்றும் விவசாயத் துறை தோட்டக்கலை துறை ஆகியவற்றில் விவசாயிகள் கோரிய அனைத்து கோரிக்கைகளும் விரைவாக நிறைவேற்றி தருகிறோம் என்ற வாக்குறுதி அளித்து சமாதான பேச்சுவார்த்தையை முடித்து வைத்தார்கள் விவசாயிகள் மகிழ்ச்சியோடு மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி கூறி விடை பெற்றார்கள் .
செய்தியாளர். வா. சீராளன்
No comments:
Post a Comment