மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாலை மறியல்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 March 2022

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாலை மறியல்!!!

 நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் திரு அரசு, சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை 165 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த 2010ஆம் ஆண்டில் திட்டம் தயார் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ரூபாய் 3517 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2018ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சாலை பணிகள் நிறைவு பெறாமல் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரம் ஏராளமான மழைநீர் வடிகால் மற்றும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே கிடக்கின்றது. மேலும் தோண்டப்பட்ட குழிகள் அரைகுறையாக நிற்கும் கட்டுமான பணிகளால் இடையூறு ஏற்பட்டு விபத்துக் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மர்க்கிஸ்ட் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செய்தியாளர்: p . ஜெகதீசன்

No comments:

Post a Comment

*/