பண்ருட்டியில் செந்தமிழ்ச் சங்கம் தாய்மொழி தின விழா ..... - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 March 2022

பண்ருட்டியில் செந்தமிழ்ச் சங்கம் தாய்மொழி தின விழா .....


 பண்ருட்டியில் செந்தமிழ்ச் சங்கம் தாய்மொழி தின விழா நடைபெற்றது.!!!


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செந்தமிழ் சங்கத்தின் 114 வது மாத அமர்வு ,மகளிர் தினம் தாய்மொழி தினம் மற்றும் சிறப்பாகத் தமிழ் பணியாற்றும் பிரான்ஸ் வொரேயால்  தமிழ் கலாச்சார மன்றத்தின் தலைவர் இலங்கைவேந்தன் பாண்டுரங்கன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது


இந்த பாராட்டு விழாவானது பண்ணுருட்டி திருவதிகை எஸ் .வி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது இசை பாவலர்கள் சிவானந்தம் தியாக கருணா  செல்வி ஹெர்ஷிகா ஆகியோர் தமிழ் வாழ்த்துப்  பாடல்களை பாடி விழாவைத் தொடங்கி வைத்தார்கள்.

பண்ருட்டி செந்தமிழ் சங்கத்தின்  தலைவர் பா.சா. வைரக்கண்ணு அவர்கள் தலைமை  தாங்கினார். 

இந்த விழாவில் சந்தானம் அய்யங்கார் ஜெ.ஏ.அசோக்ராஜ், பெ‌.கிருஷ்ணமூர்த்தி ,அ. செந்தில்குமார்,குமார ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பண்ருட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா அவர்களும் பிரான்ஸ்  வொரேயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் தலைவர் இலங்கைவேந்தன் அவர்களும் பண்ணுருட்டி ரோட்டரி இன்னர்வீல் தலைவர் சந்திரா சீனிவாசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை நல்கி சிறப்பித்தார்கள்.


 சிறப்பாக தமிழ் பணியாற்றும் பிரான்ஸ் வொரேயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் தலைவர் இலங்கை வேந்தன் அவர்களுக்கு "செந்தமிழ்ச் செம்மல்" எனும் விருது வழங்கியும் பண்ருட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர்  சபியுல்லா அவர்களுக்கு செந்தமிழ் சேவகர் எனும் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் அன்னையும் தமிழும் எனும் தலைப்பிலான கவியரங்கம் கவிஞர் அ.பாண்டு அவர்கள் தலைமையில் நடைபெற்றது கவியரங்கில் கவிதைகனேசன் கோவி. மகாவிஷ்ணு அரங்க. கிருஷ்ணன் ,கோ. நாகராஜன் லட்சுமி பாண்டுரங்கன் குமாரி ,யோகேஷ் ,கீதாலட்சுமி அஞ்சலாட்சி ,சுந்தரபழனியப்பன் ஆகியோர் கவிதை பாடி சிறப்பித்தார்கள் விழாவில் பண்ருட்டி செந்தமிழ் சங்கத்தின் பொருளாளர் இராம. சுதாகரன் அவர்கள் நன்றி கூறினார்கள்

பண்ருட்டியில் இருந்து தமிழக குரல் செய்தியாளர்: வா.சீராளன் 

No comments:

Post a Comment

*/