விருத்தாச்சலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி:வாக்கு சேகரித்த நண்பர் தற்கொலை முயற்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 February 2022

விருத்தாச்சலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி:வாக்கு சேகரித்த நண்பர் தற்கொலை முயற்சி


விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் 13-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ரஞ்சித்குமார் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் விஜயகுமார் (வயது 46) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தேர்தல் முடிவில் ரஞ்சித்குமார் 316 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட கருணாநிதி 582 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்ததால் மனவேதனையில் இருந்து வந்த நண்பர் விஜயகுமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்த வேதனையில் வாக்கு சேகரித்த நண்பர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

*/