சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட கட்சி முற்றுகை போராட்டம் : தீட்சிதர்களை கைது செய் !! கைது செய்!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 February 2022

சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட கட்சி முற்றுகை போராட்டம் : தீட்சிதர்களை கைது செய் !! கைது செய்!!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட கட்சி சார்பில்  சிதம்பரம் கீழவீதியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

நடராஜர் கோயில் சில நாட்களுக்கு முன் சிற்றம்பல மேடையில் ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி சாதி பெயரை சொல்லி திட்டியதாக அவர் அளித்த புகாரின்பேரில், 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை   கைது செய்ய வேண்டும் என்றும், தீண்டாமை,சாதி அடியோடு ஒழிக்க வேண்டும் என்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மேலும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களை கண்டித்து சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருவது சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*/