கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் இவர் பாமக ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் . இவரது கொள்ளு தாத்தா அழகுப்புச்சிக்கு சொந்தமான 5 செண்டு வீட்டு மனையில் மூன்று தலைமுறைக்கு மெல் வசித்து வருகிறார். வைத்தீஸ்வரன் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமர் என்பவர் 1994 ஆம் ஆண்டு அழகுப்புச்சி பெயரில் உள்ள 5.செண்டு மனை பட்டாவில் இருந்து ஒன்றரை செண்டு இடத்தை ராமர் முறைகேடாக பட்டா பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்தீஸ்வரன் சென்று விசாரணை செய்தபோது ஆவணங்கள் அனைத்தும் வைத்தீஸ்வரன் கொள்ளுத்தாத்தா அழகுபூச்சியின் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது. முறைகேடாக ராமருக்கு வழங்கப்பட்ட பட்டாவை நீக்கக்கோரி வைத்தீஸ்வரன் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் வைத்தீஸ்வரன் ஆட்டுக் குட்டிகளுடன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று திடீரென்று குடியேறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத துணை வட்டாட்சியர் கிருஷ்ணன், வைத்தீஸ்வரன் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இப்பிரச்சனைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அதன் பின்னர் வைத்தீஸ்வரன் ஆட்டுக்குட்டிகள் உடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment