கடலூரில் கால்நடைகள் சிறப்பு மருத்துவ முகாம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 February 2022

கடலூரில் கால்நடைகள் சிறப்பு மருத்துவ முகாம்!!!


தமிழக அரசின்‌ சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்‌ கடலூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌, ஞானமேடு கிராமத்தில்‌ அண்மையில்‌நடைபெற்றது.

முகாமில்‌ கால்நடை துறை மண்டல உதவி இயக்குநர்‌ கஸ்தூரி பங்கேற்று, சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளையும்‌, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பாராட்டு சான்றிதழையும்‌ வழங்கினார்‌. முகாமில்‌ கால்நடை மருத்துவ அறிவியல்‌பல்கலைக்கழக உதவி பேராசிரியர்‌ பி.முரளி கலந்துகொண்டு கால்நடை வளர்ப்பு மற்றும்‌ தீவன பராமரிப்பு பற்றி விளக்கிக்‌கூறினார்‌ . 

முகாமில்‌, 150-க்கும்‌ மேற்பட்ட கால்நடைகள்‌ 50 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளர்‌ அன்பழகன்‌, கால்நடை பராமரிப்பு உதவியாளர்‌ லட்சுமி ஆகியோர்‌ செய்திருந்தனர்‌.மேலும்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவர்கள்‌அரவிந்தன்‌, பரணிதரன்‌, கெளதமன்‌ உள்ளிட்டோர்‌ கலந்துகொண்டனர்‌.

No comments:

Post a Comment

*/