கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலையில் உள்ள பழைய மாவட்ட கழககட்டிட வளாகம், வன்னியர்பாளையம் நகராட்சி துவக்கப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரெட்டிச்சத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளிஆகிய வாக்குச்சாவடி மையங்களிலும், நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்டஆர்.ஆர்.மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டைஅரசு ஆனர்கள் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட பி.முத்தையர் புனிதஅன்னாள் துவக்கப்பள்ளி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன்வாக்களித்ததை பார்வையிட்டதோடு, வாக்குச்சாவடி மைய அலுவலர்கள்,பணியாளர்கள் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட கொரோனாவழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைபின்பற்றியும், கையுறை அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்தியும் வாக்குப்பதிவுநடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் மிகபதற்றமான 250 வாக்குச்சாவடி மையங்களையும் கண்காணிப்பு கேமராக்கள்னபொருத்தப்பட்டு தொடர்ந்து கணர்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம்முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில்வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கடலூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.விஸ்வநாதன், நெல்லிக்குப்பம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.பார்த்தசாரதி,தொரப்பாடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.வைஜெயந்தி, பண்ருட்டிநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. உமாமகேஸ்வரி, மேல்பட்டாம்பாக்கம்தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.சண்முகசுந்தரி, உதவி தேர்தல் நடத்தும்அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment