நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் மாலை 5 மணிநிலவரப்படி 70.71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடலூர் மாநகராட்சியில் 66.74சதவீத வாக்குகள் பதிவாகின.
மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி,நெல்லிக்குப்பம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில்உள்ள 447 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டநிலையில், 10 இடங்களில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வாகினர். இதனால்,எஞ்சிய 437 பதவிகளுக்கு 1,994 பேர் போட்டியிட்டனர். சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. பேரூராட்சிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றநிலையில் மாநகராட்சியில் வாக்குப் பதிவு மந்தமாகவே காணப்பட்டது.
மாவட்டத்தில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை வாக்குப் பதிவு விவரம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி,காலை 9 மணிக்கு 10.11 சதவீதமும், 11 மணிக்கு 25.44 சதவீதமும், பகல் 1 மணிக்கு46.04 சதவீதமும், மாலை 3 மணிக்கு 57.68 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாலை5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவுற்ற நிலையில் 70.71 சதவீதம் வாக்குகள்பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 6 மணி வரை கரோனா நோயாளிகளும், 5 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வாக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்டது நோயாளிகளும், 5 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வாக்குச் செலுத்தவந்தவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் மாநகராட்சியில் 66.74 சதவீதம் வாக்குகள் பதிவானது. நகராட்சிகளில் நெல்லிக்குப்பம்-75.63, சிதம்பரம்-64.41,பண்ருட்டி-75.48, விருத்தாசலம்-69.57, வடலூர்-71.57, திட்டக்குடி-76.17 சதவீத வாக்குகள் பதிவாகின.பேரூராட்சிகளில் அண்ணாமலை நகர்- 72.72, புவனகிரி-78.18, கங்கைகொண்டான்-68.38 ,காட்டுமன்னார்கோவில்-70.40,கிள்ளை-74.40, குறிஞ்சிப்பாடி-78.26,லால்பேட்டை-64.93,மங்கலம்பேட்டை-77.40,மேல்பட்டாம்பாக்கம்-78.22.பரங்கிப்பேட்டை-65.58, பெண்ணாடம்-69.59, சேத்தியாத்தோப்பு-75.90, ஸ்ரீமுஷ்ணம்-79.85, தொரப்பாடி-81.91 சதவீத வாக்குகள்பதிவாகின. நகராட்சிகளில் சராசரியாக 71.33 சதவீதமும், பேரூராட்சிகளில் சராசரியாக 73.05 சதவீதமும் வாக்குகள்பதிவாகின.
No comments:
Post a Comment