கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யாசாமி, வரதராஜன். இருவருக்கும் தேர்தல் முன்விரோதம் உள்ளது.அய்யாசாமி மகன் பிரபு, 38, தன்னை வரதராஜன் ஆதரவாளர் பாக்யராஜ், 42, திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் கொடுத்தார்.இதையடுத்து, தன் நிலத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக, பிரபு மீது புகார் அளிக்க பாக்யராஜ் ஸ்டேஷன் சென்றார்.அப்போது, பிரபு கொடுத்த புகாரில் கைது செய்யப் போவதாக கூறி, பாக்யராஜை ஸ்டேஷனில் அமர வைத்தனர்.
இதையறிந்த வரதராஜன் தரப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி, ஸ்டேஷனை முற்றுகை இட்டனர். அப்போது, வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து தண்ணீர் ஊற்றினர்.ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்ததால் கலைந்துசென்றனர்.
No comments:
Post a Comment