கடலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் இயற்கை உரம்தயாரிக்க தலா ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரக் கூடம் குறிஞ்சிப்பாடி ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட வடக்குத்து ஊராட்சி, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பரம் ஊராட்சி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரப்பாளையம்ஊராட்சி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட c.கொத்தங்குடி ஊராட்சி,விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி, நல்லூர் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர் ஊராட்சி, மங்களுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமநத்தம்ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் துவக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் உரம் தயாரிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சுற்றியுள்ளஅங்காடிகள், கடைகள் ஆகியவற்றிலுள்ள காய், கனி விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை செய்தது போக அடிப்பட்டு அழுகிப்போனவை மற்றும் விற்பனை செய்ய இயலாத நிலையில் உள்ளவை ஆகியவற்றினை தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரம் செய்து இயற்கை உரம்தயாரிப்பதற்காக உள்ள மையங்களில் உள்ள கொள்கலன்களில் சேகரித்து குறிப்பிட்டகாலத்திற்கு வைத்திருந்து நொதிக்கச்செய்து இந்த இயற்கை உரம் தயார் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment