கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது ஆடூர் பூங்குடி கிராமம். இங்கு கருமாரியம்மன் கோவில் உள்ளது.நேற்று இரவு வழக்கம்போல் நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடப்பட்டிருந்தது.
இந்த கோவிலின் அருகே உள்ள செல்வமுத்துக்குமரன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இதேபோல பக்கத்து ஊரான செங்கல்மேட்டில் உள்ள மரியம்மன் கோவிலிலும் கதவின் பூட்டை உடைத்து அங்கும் அம்மன் சிலையிலிருந்து தங்க தாலி திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோவிலின் நிர்வாகிகள் கொடுத்த புகார்களின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை தேடி வருகின்றனர். 4 கோவில்களில் தொடர்ந்து நடந்த கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment