தனியார் பள்ளியை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 February 2022

தனியார் பள்ளியை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !!!!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிக்கூட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த பள்ளியில்  படிக்கின்ற மாணவ மாணவிகள் பள்ளி கட்டணத்தை உடனடியாக கட்ட சொல்லியும் கட்டாத மாணவ-மாணவிகளை பள்ளிக்கூட மைதானத்தில் உட்காரவைத்து தண்டிப்பதும் இந்த பள்ளிக்கூடத்தின் அவ்வப்போது பல குறைபாடுகள் நடந்து வருவதாகவும் சரியாக பள்ளிக்கூடத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்குவதையும் 

இப்படி பல கோரிக்கைகளை  வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் துரை அவர்கள் தலைமையிலும்,  சிபிஐ நகரச் செயலாளர் சக்திவேல் அவர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொறுப்பாளர் பாலமுருகன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நகர தலைவர் முருகன், தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி மாவட்டச் செயலாளர் ஷேக் நூறுதீன், சபியுல்லா இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் அஇஅதிமுக பேச்சாளர் ஸ்ரீதர்,மக்கள் நீதி மையம் நகர செயலாளர் முத்து, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா, பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், சிபிஐ வட்டார பொறுப்பாளர் ஞானசேகர், தேவ் ,ஆனந்த், ஏ பி யு பி ஆகியோர் முன்னிலையிலும் அக்பர். அப்துல் அஜி .ரமேஷ் . முருகன். .முத்துக்குமரன் .கார்த்தி. வீராசாமி. ராஜா. குமரன். சிவகுமார். மற்றும்  ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையை நிகழ்த்தினார்கள் இந்த பள்ளிக்கூட நிர்வாக மீது உரிய நடவடிக்கை இந்த அரசு எடுக்க வேண்டும் இனிமேல் இப்படி தவறு நடந்தால் மிகப் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

*/