கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண்ருட்டி நகராட்சியில் 33. வார்டுகளில் 24. வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . 7 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர் . 2. வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் .
24.வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று பண்ருட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது
பண்ருட்டியில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டில் திமுக வேட்பாளராக பண்ருட்டி விசிக நகரச் செயலாளர் கார்த்திகேயன் வெற்றி பெற்றார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பண்ருட்டி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அவர்கள் வழங்கினார்.உடன் பண்ருட்டி திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
பண்ருட்டியில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டில் அதிமுக வேட்பாளர் பிரியாபாக்யராஜ் வெற்றி பெற்றார்.வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பண்ருட்டி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment