கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியில் 19.02.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் 2022-ன் வாக்கு எண்ணும் பணியானது 22.02.2022 அன்று புவனகிரி, அரசினர் பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 17 வார்டுகளுக்குமுடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 04-வது வாரடிற்கான பின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்பதிந்துள்ள வாக்குகளை எண்ணும்போது இயந்திரத்தின் திரையிடும் பகுதி ([21501ஸு 560110) பழுதின் காரணமாக முடிவினை அறிய இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதன் விவரம் சென்னை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாகதெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி புவனகிரி பேரூராட்சியில் நிலுவையில் உள்ள 4 வது வார்டிற்கான மறு வாக்குப்பதிவு 24.02.2022 இன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும், கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை05.00 மணி முதல் 06.00 மணி வரை கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். மேலும், இன்று மாலை 07.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை,வாக்குப்பதிவு மையத்திலேயே நடைபெற்றது.
இந்த வார்டில் மொத்தம் 1170 (100%)வாக்காளர்கள் உள்ளனர் இதில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 814(69.57%) வாக்குகள் பதிவானது. இதனைத் தொடர்ந்து இந்த வார்டில் 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும், பா.ம.க வேட்பாளரும், அ.இ.அ.தி.மு.க வேட்பாளரும். வி.சி.க வேட்பாளரும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அறிவிப்புகள் கூறப்பட்டது. "இதில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து" விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட மா.லலிதா 622(76.41) எடுத்து வெற்றி பெற்றார்.
| வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை | |
|---|---|---|---|---|
| வார்டு 1 | திரு சா பாரதிதாசன் | மற்றவை | வெற்றி | |
| வார்டு 2 | திரு ச கிருஷ்ணன் | இந்திய தேசிய காங்கிரஸ் | வெற்ற | |
| வார்டு 3 | திருமதி சு புஷ்பரேகா | மற்றவை | வெற்றி | |
| வார்டு 4 | திருமதி ம லலிதா | மற்றவை | வெற்றி | |
| வார்டு 5 | திருமதி நா உமாபரமேஸ்வரி | இந்திய தேசிய காங்கிரஸ் | வெற்றி | |
| வார்டு 6 | திருமதி ம சரஸ்வதி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 7 | திருமதி ரா வினோதினி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 8 | திருமதி சி சாமுண்டிஸ்வரி | இந்திய தேசிய காங்கிரஸ் | வெற்றி | |
| வார்டு 9 | திருமதி இ ரேவதி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 10 | திரு ப சண்முகம் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 11 | திரு த ரெங்கநாதன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 12 | திருமதி ர ராஜலெட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 13 | திரு த கந்தன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 14 | திரு நா பாலமுருகன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 15 | திரு இரா செல்லபாண்டியன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 16 | திரு அ ஜோதி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெறி | |
| வார்டு 17 | திருமதி ச லதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி | |
| வார்டு 18 | திருமதி ர ஜெயப்பிரியா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
No comments:
Post a Comment