சிதம்பரம் அருகே இல்லாங்கூர் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாசம். அவரது மனைவி சுகிதா (வயது 27) இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ 3 ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 23-ந் தேதி தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த கணவர் அருள்பிரகாசம் சுகிதாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் அருள்பிரகாசம் புகார் செய்தார். புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுகிதா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment