சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வேலைங்கிபட்டு ஊராட்சி அத்தியாநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் சுமார் 29 குழந்தைகள் நேற்று மதிய உணவில் வழங்கிய அழுகிய முட்டையினை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டதால் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை வரும் குழந்தைகளை கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மருத்துவரிடம் கேட்டு அறிந்தார்.
அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக அம்மா பேரவை துணைத் தலைவருமான பி.எஸ்.அருள், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என். குமார், ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், அண்ணாமலைநகர் நிர்வாகிகள் உத்திராபதி, கார்த்திகேயன், செந்தில், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் லாவண்யா, துணை கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, குழந்தை நல மருத்துவர்கள் டாக்டர் பாலச்சந்திரன், டாக்டர் ராமநாதன், மருத்துவ அதிகாரி டாக்டர் பாரி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்:R. மணிகண்டன்
No comments:
Post a Comment