கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோவையில் இருந்து சொந்த ஊருக்கு பிரசாந்த் வந்தார். அப்போது தனது தாய் சித்ராவிடம், தனக்கு கே.டி.எம். மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கேட்டுள்ளார், ஆனால், அதற்கு அவர் முடியாது என்று தெரிவித்துள்ளார்.பிரசாந்த், தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து, கடந்த 24-ந்தேதி 3 லட்சம் ரூபாய்க்கு புதிதாக கே.டி.எம். மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார்.
நேற்று காலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, தொழுதூர் நோக்கி பிரசாந்த் சென்றுள்ளார். அப்போது எழுத்தூரில் தனியார் பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராமநத்தம் போலீசார், பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்
No comments:
Post a Comment