தமிழகத்தில், 5 வயதிற்கு உட்பட்ட 60 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வேப்பூரில் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து பா.கொத்தனூர் ஊராட்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஊராட்சி தலைவர் முனியன் சொட்டு மருந்து வழங்கினார், உடன் அங்கன்வாடி ஆசிரியை விஜயலட்சுமி இருந்தனர் மற்றும் பூலாம்பாடி ஊராட்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஊராட்சிமன்ற தலைவர் நாராயணசாமி சொட்டு மருந்து வழங்கினார், உடன் ஊராட்சி செயலர் பானுப்பிரியா மணிகன்டன் செவிலியர்கள் அங்கன்வாடி ஆசிரியர்கள் இருந்தனர் மேலும் செளந்திரசோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பேரி அங்கன்வாடி பள்ளிக்கூடத்தில் இன்று ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்ற துணை தலைவர் துர்காதேவி ஆறுமுகம் தொடங்கி வைத்தார் இதில் அங்கன்வாடி பணியாளர் கலைச்செல்விஉதவிப் பணியாளர் இளவரசி மற்றும் கிராம 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இளம் பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிக்க, ஆண்டு தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வந்தது.போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு தவணை சொட்டு மருந்து மட்டுமே போடப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலால், ஜன., 23ல் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த முகாம், 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று நடக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட 60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment