கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடலூர் நகராட்சி பார்வதிபுரத்தில் NLC இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் நிதியின் மூலமாக 86.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நூலக கட்டிடம் மற்றும் வள்ளலார் சபை அருகே 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்கள் .
அவர்களுடன் NLC இந்தியா நிறுவனத்தின் அதிபர் திரு ராகேஷ் குமார் அவர்கள் NLC இந்தியா நிறுவனத்தின் மனிதவள இயக்குனர் திரு விக்ரமன் அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வருவாய்) திரு ரஞ்சித்சிங் அவர்கள், மாவட்ட நூலக அலுவலர் திருமதி C. பாலசரஸ்வதி அவர்கள் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் திரு V.சிவக்குமார் அவர்கள் குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு நாராயணசாமி அவர்கள் NLC இந்தியா நிறுவனத்தின் GM/CSR திரு இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் குறிஞ்சிப்பாடி வடலூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment