கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி தேர்தலில் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு, தேர்தல் ஆணைய நடைமுறைகள் குறித்த பயிற்சி நடந்தது.விருத்தாசலம் நகராட்சி 33 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தலில், கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், நாளை காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி நடக்கிறது. 10 டேபிள்கள், 7 சுற்றுகள் மூலம் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, வெற்றி வேட்பாளர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட உள்ளது.
விருத்தாசலம் அல்லாத பகுதிகளை சேர்ந்த சூப்பர்வைசர்கள், உதவியாளர்கள் தலா 10 வீதம் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணைய நடைமுறைகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் பயிற்சி நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். மேலாளர் அசோக்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் டேவிட் லாசர் பங்கேற்றனர். அதில், ஓட்டு எண்ணும் முன் வேட்பாளர்கள், முகவர்களிடம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை காண்பித்து, ஒப்புதலுடன் சீலை அகற்றுவது. ஓட்டு எண்ணிக்கை குறித்து பதிவேடுகள் பராமரிப்பது, தேர்தல் ஆணைய நடைமுறைகளின்படி பாகுபாடின்றி பணியில் ஈடுபடுவது உட்பட பல அறிவுரைகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment