மாவட்டம் ஆட்சியர் வாக்கு எண்ணும் அறிவுரை வழங்கினார்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 February 2022

மாவட்டம் ஆட்சியர் வாக்கு எண்ணும் அறிவுரை வழங்கினார்!!!

 

கடலூர்‌ மாவட்டம்‌ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்‌ நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சிகள்‌மற்றும்‌ பேரூராட்சிகளுக்கு 22.02.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதைமுன்னிட்டு கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ வாக்கு எண்ணிக்கைக்கானமுன்னேற்பாடு பணிகள்‌ குறித்து மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌! மாவட்ட ஆட்சித்தலைவர்‌திரு.கி.பாலசுப்ரமணியம்‌, இஆப,அவர்கள்‌ தலைமையில்‌ வட்டார தேர்தல்‌ பார்வையாளர்கள்‌மற்றும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.


மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌/ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவதுஒவ்வொரு மேஜைக்கும்‌ வாக்குகள்‌ எண்ணும்‌ மேற்பார்வையாளர்‌ ஒருவர்‌, வாக்குகள்‌எண்ணும்‌ உதவியாளர்‌ ஒருவர்‌ மற்றும்‌ கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்துகொண்டுவந்து மேற்பார்வையாளரிடம்‌ அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும்‌ ஒரு அலுவலகஉதவியாளர்‌ நியமனம்‌ செய்யப்படவேண்டும்‌, ஒவ்வொரு வாக்கு எண்ணும்‌ மைத்திற்கும்‌ 3நுண்பார்வையாளர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட்டு ஒரு நுண்பார்வையாளர்‌ பாதுகாப்பு அறையில்‌வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும்‌ மையத்திற்கு கொண்டுசெல்வதை கண்காணிக்கவும்‌, இரண்டாவது நுண்பார்வையாளர்‌ தபால்‌ வாக்குகளைகண்காணிக்கவும்‌, மூன்றாவது நுண்பார்வையாளர்‌ வாக்கு எண்ணும்‌ அறையினை முழுவதும்‌கண்காணிப்பார்‌.


வாக்கு எண்ணும்‌ மேற்பார்வையாளர்‌ தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில்‌,வாக்கு எண்ணும்‌ பணிக்கான எழுதுபொருட்கள்‌ மற்றும்‌ உபகரணங்கள்‌ உள்ளதைசரிபார்த்துக்கொள்ள வேண்டும்‌. ஒவ்வொரு மேஜையிலும்‌ வாக்கு எண்ணிக்கைக்காகஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின்‌(சுற்று வாரியாக வரிசை எண்கள்‌அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்‌. வாக்குச்சாவடி தலைமைஅலுவலரால்‌ தயார்‌ செய்யப்பட்ட படிவம்‌ 23 குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின்‌வரிசை எண்ணை, மேஜைக்கு அனுப்பியுள்ள கட்டுப்பாட்டு கருவியின்‌ மீது ஒட்டப்பட்டுள்ளவரிசை எண்ணுடன்‌ ஒப்பிட்டு சரிபார்த்துக்கொள்ள வேண்டும்‌.


மாநில தேர்தல்‌ ஆணையம்‌ அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளானஅனைவரும்‌ முழுமையாக பின்பற்றி வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ பணிகளை மேற்கொள்ளவேண்டும்‌ என தெரிவித்தார்‌.இக்கூட்டத்தில்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.சி.சக்திகணேசன்‌, இ.கா.ப.,அவர்கள்‌, கூடுதல்‌ ஆட்சியர்‌ (வருவாய்)திரு.ரஞ்ஜீத்‌ சிங்‌, இ.ஆ.ப., அவர்கள்‌, மாவட்டஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வளர்ச்சி) திருமதி.மல்லிகா வட்டார தேர்தல்‌பார்வையாளர்கள்‌, தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

No comments:

Post a Comment

*/