வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர கண்காணிப்பு - 143 கேமரா பொருத்தம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 February 2022

வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர கண்காணிப்பு - 143 கேமரா பொருத்தம்!!!

 




கடலூர்‌ மாவட்டத்தில்‌ நகரப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணும்‌ பணியில்‌ 188 பேர்‌ ஈடுபடுத்தப்படுகின்றனர்‌. அதாவது ஒரு மேஜைக்கு தலா ஒருகண்காணிப்பாளர்‌, வாக்கு எண்ணிக்கை உதவியாளர்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

இதன்படி மொத்தம்‌ 88 வாக்கு எண்ணிக்கை மேஜைகள்‌ அமைக்கப்பட்டுள்ள நிலையில்‌ கண்காணிப்பாளராக 90 பேரும்‌,உதவியாளர்களாக 98 பேரும்‌ நியமிக்கப்பட்டனர்‌.143 கண்காணிப்பு கேமராக்கள்‌: ஒவ்வொரு வாக்கு எண்ணும்‌ மேஜைக்கும்‌ தலா ஒரு கண்காணிப்பு கேமராபொருத்தப்படுகிறது. இதன்படி, கடலூர்‌ மாநகராட்சிக்கு 28 கேமராக்கள்‌ பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கைகண்காணிக்கப்படுகிறது.

நகராட்சிகள்‌ அளவில்‌ நெல்லிக்குப்பம்‌-20, பண்ருட்டி-16, சிதம்பரம்‌-22, விருத்தாசலம்‌-6, திட்டக்குடி-4, வடலூர்‌:15கேமராக்களும்‌, பேரூராட்சிகளில்‌ புவனகிரி, தொரப்பாடி பேரூராட்சிகளுக்கு தலா 4, மற்ற பேரூராட்சிகளுக்கு தலா 2கண்காணிப்புக்‌ கேமராக்கள்‌ என மொத்தம்‌ 143 கேமராக்கள்‌ பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*/