சிதம்பரம் :
கடலுார் மாவட்டம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா வரும் 1 ம் தேதி துவங்குகிறது.நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வக்கீல் சம்மந்தம் அளித்த பேட்டி:கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் 41 ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 1ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை நடக்கிறது. பல்வேறு நாடுகள், பல மாநிலங்களில் இருந்து நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் நாட்டிய விழா நடக்கும்.
துவக்க விழாவில் பத்மபூஷன் விருது பெற்ற தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் பங்கேற்கின்றனர்.இதில் பரதம், கதக், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், ஒடிசி ஆகிய நாட்டியங்கள் நடக்கின்றன. ஒரே மேடையில் 5 நடனத்தையும் காணும் வகையில், 'நிருத்திய சங்கமம்' 4 ம் தேதி நடக்கிறது. மேலும் 75 வது சுதந்திர தின ஆண்டையொட்டி சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையிலும், 'வீரம் விளைந்த பூமி' என்ற நாட்டிய நாடகம் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது முன்னாள் தலைவர் நடராஜன், பொருளாளர் பழனி, இணை செயலாளர் கணபதி உடனிருந்தனர்.
No comments:
Post a Comment