கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், குருவை நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக, விவசாய நிலங்களுக்கு, தண்ணீர் பாசனம் செய்வதற்காக தேவையான, மும்முனை மின்சாரம் முறையாக வழங்காததால், கோடை வெப்பத்தால், நெற்பயிர்கள் காய்ந்து கருகி வீணாகி வருகிறது. இது குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளிடம், மும்முனை மின்சாரம் முழுமையாக வழங்க வேண்டும் என, விவசாயிகள் பல முறை புகார் அளித்தும், மின்வாரியத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால், ஆத்திரமடைந்த கம்மாபுரம் பகுதி விவசாயிகள், கம்மாபுரத்தில் உள்ள மின்வாரியத்துறை அலுவலகத்தை முற்றிகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மின்வாரியத்துறை அதிகாரிகளை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகள், விருத்தாச்சலம்_ சிதம்பரம் செல்லும் சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த, கம்மாபுரம் காவல்துறையினர் விவசாயிகளிடம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில், மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment