விருத்தாச்சலம் அருகே குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பொதுமக்கள், இரு பிரிவாக பிரிந்து, இரண்டு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 May 2026

விருத்தாச்சலம் அருகே குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பொதுமக்கள், இரு பிரிவாக பிரிந்து, இரண்டு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த இருசாளகுப்பம் கிராமத்தில், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் வசிக்க கூடிய பகுதியில், கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லாததால், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம், பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், இரு பிரிவாகப் பிரிந்து, விருத்தாச்சலம் - ஆலடி செல்லும் சாலையிலும், கோட்டேரி கிராமத்திற்கு செல்லும் சாலையிலும், அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரமாக காத்துக்கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீசார் வருகை தந்து, குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறியதன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

*/