கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 135 டாஸ்மாக் கடைகளில், புதிய விதிகளின்படி 500 மீட்டர் சுற்றளவு கட்டுப்பாடு) கண்டறியப்பட்ட சுமார் 19 கடைகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளன.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 May 2026

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 135 டாஸ்மாக் கடைகளில், புதிய விதிகளின்படி 500 மீட்டர் சுற்றளவு கட்டுப்பாடு) கண்டறியப்பட்ட சுமார் 19 கடைகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளன..

 


சிதம்பரத்தில் முக்கிய நடவடிக்கை சிதம்பரம் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகிலேயே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நேற்று மே 12 முதல் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது

இந்தப் பகுதியில் மது அருந்துபவர்களால் மாணவ மாணவிகள் மற்றும் பெண் பயணிகளுக்கு ஏற்பட்டு வந்த இடையூறுகள் இனி முடிவுக்கு வரும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

இதேபோன்று சிதம்பரம் ரயில் நிலையம் நுழைவு வாயில் மதுபான கடை அண்ணாமலை நகர் மேம்பாலம் இரக்கம் மதுபான கடை சிதம்பரம் நாதன் பேட்டை மதுபான கடை ஆகிய நான்கு கடைகள் மூடப்படும் என தெறிவித்துள்ளனர்

 பட்டியலில் உள்ள மற்ற இடங்கள் கடலூர் பேருந்து நிலையம், நெல்லிக்குப்பம் மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் செயல்படும் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்து, கடைகளை காலி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

 மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 717 கடலூர் மாவட்டத்தில் 19 காரணம் பள்ளி, கல்லூரிகள், கோவில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து மையங்களுக்கு மிக அருகில் அமைந்திருந்தது.

 காலக்கெடு இரண்டு வாரங்களுக்குள் அனைத்து 717 கடைகளும் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட நிர்வாகம், தடையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது


தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட ஒளிப்பதிவாளர் 

 P ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/