சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் எஸ் டி எஸ் ஆங்கிலப் பள்ளியில் பட்டமளிப்பு விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 13 April 2026

சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் எஸ் டி எஸ் ஆங்கிலப் பள்ளியில் பட்டமளிப்பு விழா.

 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சோழத்தரம் எஸ்.டி. சியோன் ஆங்கிலப் பள்ளியில் யு.கே.ஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழா பள்ளியின் தாளாளர் பிரவிண் சாமுவேல் மற்றும் பள்ளியின் முதல்வர்இவான்சி பிரவிண், தலைமையாசிரியர் பாபு இவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவிகளின் நடனம், நாட்டியம், ஆங்கில உரை ஆகியவை சிறப்பாக இருந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சேவா மருத்துவமனை நடத்தி வருபவரும்,2026 சட்டமன்றத் தேர்தலுக்கான புவனகிரி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக போட்டியிடும் சேவா.முத்தமிழன் கலந்து கொண்டு மாணவர்களிடம், பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய சில கண்டிப்புகளையும், நெறிமுறைகளையும் பற்றி எடுத்துக் கூறினார். இதில் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/