தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மௌலானா தமிமுன் அன்சாரி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தீவிரப் பிரச்சாரம்
சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 16-வது வட்டத்தில் கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று எழுச்சியூட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், நகர மன்ற கொறடாவுமான. ஜேம்ஸ் விஜயராகவன் இந்தப் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கினார்.
உதயசூரியனுக்கு ஆதரவு கூட்டணி கட்சி நண்பர்கள் மற்றும் தொண்டர்கள், 16-வது வட்டத்திற்குட்பட்ட அனைத்து இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்ற ஜேம்ஸ் விஜயராகவன், வேட்பாளர் தமிமுன் அன்சாரியின் வெற்றி வாய்ப்பு குறித்தும், அரசின் சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார்.
தொகுதியின் முன்னேற்றத்திற்காகம் சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடும் வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
வீடு வீடாக நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பின் இந்தப் பிரச்சாரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இத்தொகுதியில் வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய தொடர் பிரச்சாரங்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

No comments:
Post a Comment