நெய்வேலி, நவம்பர் 28, 2025 (கார்த்திகை 12):
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி 29 வட்டம் பம்ப் ஹவுஸ் எதிரே, நெய்வேலி தெர்மல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திவாஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரு இளைஞர்கள் தடியுடன் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவி ஆய்வாளர் எச்சரித்தபோதும், அதை புறக்கணித்து அவரை தாக்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இச்சம்பவத்தையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் கைக்காளர்குப்பம் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கரியன் (எ) சரண்ராஜ் மற்றும் ஆதண்டார் கொல்லை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் மணிகண்டன் என அடையாளம் காணப்பட்டனர்.
இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment