காவலர் வீரவணக்கம் நாள் கடலூர் ஆயத்தப்படை வளாகத்தில் எஸ் பி ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்
காவலர் வீரவணக்க நாள் நமது நாட்டில் வீரமரணமடைந்த காவலர்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து, 16 ஆயிரம் அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, நினைவு கூறும் வகையில், வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் அமைத்துள்ள நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் அப்பாண்டைராஜ், ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு. அம்ஜத்தான், ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் திரு. விநாயகம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் மாவட்ட உதவி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் விஜயகுமார், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்
நடராஜன், பெண் காவலர் திருமதி. பெரியநாயகி ஆகியோர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள். பின்னர் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தினர்கள். இதையடுத்து போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்கள்
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்திப் பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்

No comments:
Post a Comment