இராஜ முத்தையா மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனை ஜிப்மேர் போன்று மேம்படுத்த பொதுக்கள் கோரிக்கை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது மேம்படுத்தினால் அருகில் உள்ள மயிலாடுதுறை மாவட்டங்கள் பயன்பெறும் என்று பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடலூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும்
கடலூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை (இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை 1985 ஆண்டு நிறுவப்பட்டது
ராஜா முத்தையா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் 1980 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு பல் மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது. இரண்டாம் கட்ட வளர்ச்சியில், 1985 ஆம் ஆண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. எம்.பி.பி.எஸ். மருத்துவ பாடப்பிரிவில் இந்திய மருத்துவ கவுன்சில் 125 இடங்களுக்கு அங்கீகாரம் அளித்தது 125 மருத்துவ சேர்க்கைக்கான அங்கீகாரம் பெற்ற பின் மருத்துவக் கவுன்சில் 2003 ல் 150 இடங்களாக மேம்படுத்தப்பட்டது. மேலும் 18 முதுகலை மருத்துவ பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் 10 டிப்ளமோ படிப்புகள் சேர்க்கப்பட்டன. மேலும் இயன்முறை மருத்துவ படிப்புகள்(MPT) ஐந்து வெவ்வேறு சிறப்பு பிரிவுகளில் தொடங்கப்பட்டன
2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் 2020-21 பட்ஜெட் தாக்கல் செய்யும்போது இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனைத்து வகை சிறப்புப் பிரிவுகளும் பெற்ற 1200 உயர் தர படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது அதி நவீன வசதிகளுடன் கூடிய 24 மணி நேர ஆய்வக மற்றும் கதிரிய இமேஜிங் சேவை டாப்ளர், அல்ட்ராசவுண்ட், மாமோகிராஃபி, டிஜிட்டல் எக்ஸ்-ரே, சி-ஆர்ம், CT ஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது
மேலும் சிதம்பரம் அரசு காமராசர் மருத்துவமனை தற்போது இந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்

No comments:
Post a Comment