கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கீழூர் ஊராட்சி பாச்சாரபாளையம் கிராமத்தில் இயங்கி வரும் விஏஓ அலுவலகம் ஒரு வார காலமாக திறக்கபடாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கீழூர், பாச்சாரபாளையம், ஆயிப்பேட்டை, பெரியகோவில்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு விஏஓ அலுவலகமாக கீழூர் கிராம நிர்வாக அலுவகம் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதிகளில் வசிக்கும் மாணவ மாணவிகள் இருப்பிட சான்று, சாதி சான்று களும் விவசாயிகள் வங்கியில் விவசாய கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கள்களும், இன்னபிற அரசு சான்றுகளை வாங்க விஏஓ அலுவலகத்திற்கு வருகின்றனர்.
இந்த நிலையில் இங்க பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியார் உட்பட ஒரு வார காலமாக அலுவலகம் வருவது இல்லை எனவும், இதனால் விவசாயிகள் தங்களுக்கு வங்கி கடன் பெற அடங்கள்கள் பெறமுடியாமல் அவதிபடுவதாகவும், மாணவ மாணவிகள் கல்வி சம்பந்தமாக பெறபடும் சலுகைக்காக உரிய சான்றுகள் பெறமுடியாமல் தினம் தோறும் பூட்டி கிடக்கும் அலுவலகத்திற்கு வந்து செல்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment