கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சமட்டிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிருஷ்ணம்பாளையம், சின்னதானங்குப்பம் புலியூர்காட்டுசாகை, வசனாங்குப்பம், கட்டியங்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் அவசரகாலத்தில் முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை சமட்டிக்குப்பம் SKM அறக்கட்டளை சார்பில் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் புதியதாக அவசர ஊர்தி வாங்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.
சமட்டிக்குப்பம் விருப்பநாதர் கோவில் திடலில் நடைபெற்ற விழாவில் சமட்டிக்குப்பம் SKM அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. சாமிதுரை அவர்கள் வரவேற்று பேசினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக A.K. சுப்பிரமணியம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சமட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் A.K.பூவராகமூர்த்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் ஊர் முக்கிஸ்தர்கள் சுப்பிரமணியன், அன்பழகன், முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் தங்கப்பன், ஆறுமுகம், முருகையன், தலைமையாசிரியர் சி.வி.சண்முகம், பாலமுருகன், விருப்பலிங்கம், வடிவழகன், பாண்டிதுரை, பாலமுருகன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ராஜமாணிக்கம் அவர்கள் இலவச அவசர கால ஊர்தியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
No comments:
Post a Comment